பேர்ல இருந்த ஜாதி பெயர ஜனனி தூக்கிட்டாங்க – இவங்க என்னடானா நாய்க்கு ஜாதி பெயர் வச்சி அதுக்கு பேஜ் வேற வச்சிருக்காங்க.

0
3655
janani
- Advertisement -

பொதுவாக நடிகைகள் சிலர் தங்கள் பெயருக்கு தங்கள் ஜாதி பெயரை வைத்துக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக தான் இருந்து வருகிறது. தமிழ் நடிகைகளை விட கேரள நடிகைகள் தான் தங்கள் பெயருக்கு பின்னால் தங்களது சமூகத்தில் பெயரை போட்டுக்கொள்வார்கள். லட்சுமி மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி மேனன், நித்யா மேனன், பார்வதி நாயர், ஐஸ்வர்யா மேனன் என்று பலர் இந்த லிஸ்டில் அடங்கும். அதிலும் பார்வதி மேனன் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று ஆதரவாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

கேரளாவில் தான் தங்கள் பெயருக்கு பின்னர் நாயர், மேனன் என்று தங்களுடைய ஜாதி பெயரை செத்துக்கொள்வார்கள். அந்த வகையில் தமிழில் இளம் நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன் கூட தனது பெயருக்கு பின்னால் மேனன் என்ற தனது ஜாதிப் பெயரை போட்டுள்ளார். ஆனால், தனது செல்லப் பிராணியான நாய்க்கு கூட அதன் பெயருக்கு பின்னால் தனது ஜாதிப் பெயரை போட்டுள்ளார் என்பது தான் ஆச்சரியம்.

இதையும் பாருங்க : அஜித் வீட்டில் திடீர் சோதனை – அட, கொடுமையே இந்த டைம்ல கூடவா இப்படி பண்ணுவாங்க.

- Advertisement -

ஐஸ்வர்யா மேனன், காபி என்ற வெளியாட்டு வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பெயரில் காபி மேனன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை கூட உருவாக்கி அதில் தனது செல்லப் நாயின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயர் என்ற ஜாதி பெயரை நீக்கி இருந்தது பலரின் பாராட்டை பெற்றது.

ஜனனி ஐயரின் இந்த பதிவுக்கு கீழ் ட்விட்டர் வாசி ஒருவர், ஜனனிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். மேலும், ஐஸ்வர்யா மேனனின் செல்லப்பிராணியின் இன்ஸ்டாகிராம் பக்க புகைப்படத்தை பதிவிட்டு என்ன கொடுமை இது என்று பதிவிட்டு இருந்தார். நடிகை ஐஸ்வர்யா மேனன், தமிழ் படம் 2, ஹிப் ஹாப் தமிழா நடித்த ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குடிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement