தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் எம்.பி.ஏ முடித்து உள்ளார். பின் இவர் TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது விஷ்ணுவின் ஒரு காலில் காயம் ஏற்ப்பட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது. அதற்கு பின் தான் இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும், IMDB தளத்தில் கூட சிறந்த படம் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

Advertisement

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சாலையில் காரில் சென்று கொண்டு இருந்த சில இளைஞர் செய்த அடாவடித்தனத்தை வீடியோ எடுத்து பின் அவர்கள் மீது ஹைட்ரபார்த் போலீசில் புகாரையும் அளித்துள்ளார். அதற்கு ஹைட்ராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்வீட் செய்து உள்ளனர். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலின் தந்தை பெயர் ரமேஷ் குடவ்லா. இவர் தமிழ்நாடு போலீஸ் ADGP ஆவார். அந்த ரத்தம் விஷ்ணு விஷால் உடம்பிலும் ஓடும் இல்ல.

விஷ்ணு விஷால் தந்தை

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன், எழில் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி, மனு ஆனந்தின் FIR, முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ், செந்தில் வீராசாமி இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன், எஸ்.பி. கார்த்திக் இயக்கத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம்,
ஷங்கர் தயாள் இயக்கத்தில் வீர தீர சூரன், கண்ணன் இயக்கத்தில் போடா ஆண்டவனே என் பக்கம் என பல படங்கள் தன் கைவசம் வைத்து உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Advertisement
Advertisement