இதுக்கு தான் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணியா ? விஷ்ணு விஷாலை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

By Rajkumar · 29/3/2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் முண்டாசுப்பட்டி, வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான "ராட்சசன்" திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார் விஷ்ணு விஷால் .

https://twitter.com/TheVishnuVishal/status/1243951566106685445

இதற்கிடையே, விஷ்ணு விஷால், ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான மகனும் பிறந்தார். திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். இருப்பினும் தனது மனைவியிடம் இருக்கும் மகனை மட்டும் கவனித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இதனால் தான் நர்ஸ் வேலையை செய்யவில்லை. முதன் முறையாக கூறிய ஜூலி.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால், ஒரு ஓண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் தான் தெரிந்தது அந்த பெண் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பது

https://twitter.com/Yohan_456/status/1244185531082104832

சமீப காலமாக இவர்கள் இருவரும் மாறி மாறி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘மிஸ்ஸிங் மை பூ’ என்று பிரிவில் வாடும் தொனியில் பதிவிட, “பரவாயில்லை. தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.

கொரோனா வேகமாக பரவி வரும் இச்சூழலில் விஷ்ணு விஷால் சமூக இடைவெளி அவசியம் என்ற கருத்தை தனது ட்விட்டர் வாயிலாக தனது தொழி ஜுவாலா கட்டா வாயிலாக விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், ரசிகர்கள் பலர் உங்கள் அழகிய மனைவியை எப்படி பிரிந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/raji23rajesh/status/1244075093745074181

மேலும், ஒரு சில ரசிகர்கள், கட்டின பொண்ண விட்டுட்டு இப்படி வேற பொண்ணு கூட சுத்தர, அவங்களுக்காக தான் உன் பொண்டாட்டிய டைவோர்ஸ் பண்ணியா என்றெல்லாம் கண்ட மேனிக்கு கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால், இந்த விமர்சனங்கள் எதற்கும் விஷ்ணு விஷால் பதில் அளிக்கவில்லை.

behindtalkies AMP · Quick view
View full