இரண்டாம் திருமணத்திற்கு பின் கையில் விஷ்ணு விஷால் குதியுள்ள டாட்டூ - ஆனா, இது ஜவாளா பேர் இல்லையே.
விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் திருமணம் நேற்று (ஏப்ரல் 22) மிகவும் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.
சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
இதையும் பாருங்க : மிடில் கிளாஸ்னு சொன்னீங்க எப்படி இவ்ளோ காஸ்ட்லியான பொருள் எல்லாம் வாங்குறீங்க - ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் பதிலடி.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார்.இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.
https://twitter.com/V6_Suresh/status/1385201941907529731
இப்படி ஒரு நிலையில் விஷ்னு விஷால் அறிவித்தபடி தனது இரண்டாம் திருமணத்தை நேற்று (ஏப்ரல் 22) மிகவும் சிம்பிளாக முடித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை சென்று கொண்டு இருப்பதால் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு விஷ்ணு விஷால் தனது கையில் AR என்ற டாட்டூவை குத்தியுள்ளார். அது அவரது மகன் ஆர்யன் (Aryan) பெயர் என்று கூறப்படுகிறது.