மிடில் கிளாஸ்னு சொன்னீங்க எப்படி இவ்ளோ காஸ்ட்லியான பொருள் எல்லாம் வாங்குறீங்க – ரசிகரின் கேள்விக்கு அனிதா சம்பத் பதிலடி.

0
1452
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : விவேக் அறிமுகமான முதல் படத்தில் அவரின் தம்பியான நடித்துள்ள நடிகர் கணேஷ்கர். அவரே பகிர்ந்த அறிய புகைப்படம்.

- Advertisement -

மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அப்படி இருந்தும் சமூக வலைதளத்தில் இவர் விமர்சனத்திற்கு உள்ளாகி விடுகிறார். பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத், தனது யூடு சேனலில் விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிக் பாஸில் அணிந்த மேக்கப் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், நீங்க மிடில் கிளாஸ்னு சொன்னீங்க, இப்போ இவ்ளோ காஸ்டலியான மேக்கப் பொருள் எல்லாம் எப்படி வாங்குறீங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு கஷ்டப்பட்டு சொந்த கால்ல நின்னு பிக் பாஸ் வரைக்கும் வந்திருக்கானு நெனைக்க தோனவே இல்ல போல. மிஷல் கிளாஸ் பொண்ணுங்கள நெனச்சி வருத்தபடுறேன். உலகம் உங்கள கேள்வி மட்டும் தான் கேக்கும். பாராட்டாது. அத மீறி முன்னேறுங்க. நான் மிடில் கிளாஸ் தான், பிச்சைக்காரி கிடையாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement