தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுஇருந்தார். கடந்த இரண்டு வருடங்களாகவே என்னுடைய வாழ்க்கை மிகவும் கரடு முரடாக இருந்தது. அதை நான் கருப்பு நாட்கள் என்று கூட சொல்லலாம். என் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தேன். நான் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகும் என்றும் ஒருபோதும் நினைத்தும் பார்க்கவில்லை. இதனால் நான் மதுவுக்கு அடிமையானேன். தினமும் நான் போதையில் தான் இருந்தேன். நிறைய மன அழுத்தம், தூக்கமில்லாமல் உடலை பாதிப்பது.

இதையும் பாருங்க : ஆண்களுக்கு நிகராக பளு தூக்கிய யாஷிகா. இப்படி ஒரு டெட் லிப்ட்ட வேற எந்த நடிகையும் பண்ண முடியுமா ?

Advertisement

இதனால் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பின் வேலை பளுவும் எனக்கு அதிகரித்தது. என்னுடைய தயாரிப்பு நிறுவனமும் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. சினிமா உலகிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. விவாகரத்து, மகன் பிரிவு, உடல்நல பிரச்சனை, குடிப்பழக்கம், மன அழுத்தம் என பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வந்தேன். பின்னர் நான் மெதுவாக இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர ஆரம்பித்தேன். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று உடலை வலுப்படுத்த பயிற்சி மேற்கொண்டேன். உணவுப் பழக்கங்களை ஆரோக்கியமாக சாப்பிட ஆரம்பித்தேன் என்று நீண்ட பதிவை செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பல்வேறு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு எப்படி உடலை மாற்றினேன் என்பதை கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால் மேலும் அந்த வீடியோவில் தான் 27 வயது வரை மதுவை தொட்டதே இல்லை என்றும், சினிமாவில் வந்த பின்னர் எப்போதாவது குடிக்க ஆரம்பித்தேன். ஆனால், மன அழுத்தத்தில் இருந்த போது அது பழக்கமாக மாறி விட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement