தன்னுடைய தம்பிக்கு ஜோடி தேடி விஷ்ணு விஷால் வெளியிட்ட விளம்பரம் – வைரலாகும் புகைப்படம்

0
589
vishnu
- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேடி வருவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கும் விளம்பரம் தற்போது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
vishnu

அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த படம் எப்ஐஆர். எப்ஐஆர் என்றால் ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என அர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தினை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார்.

- Advertisement -

எப்ஐஆர் படம்:

இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து இருந்தார்கள். இவர்களுடன் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் திரைப் பயணத்தில் முக்கிய படமாக எஃப்.ஐ.ஆர் இருந்தது. ஏன்னா, அந்த அளவிற்கு படத்தில் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், ஆக்ஷன், த்ரில்லர், தோல்வி, காதல், பாசம் என அனைத்தையும் விஷ்ணு விஷால் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் பேசி இருந்தார்கள். மேலும், இந்த படம் ஆக்ஷன், த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கிறது.

விஷ்ணு சகோதரர்:

இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேடி வருவது குறித்து விளம்பரம் செய்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா. இவரை சினிமாவில் நடிக்க வைக்க விஷ்ணு விஷால் விரும்பினார்.

விஷ்ணு சகோதரர் நடிக்கும் படம்:

ஏற்கனவே இது குறித்தும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சகோதரர் நடிக்கும் படத்தின் கதை முடிவு செய்யப்பட்டதாக விஷ்ணு தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகையை தேடி வருவதாகவும், 23 முதல் 25 வயது வரை உள்ள இளம் பெண்கள் படக்குழுவினரை அணுகலாம் என்றும் விஷ்ணு விஷால் டிவிட்டர் பக்கத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டுள்ள பதிவு சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement