அதன் பின்னர் தான் கிரிக்கெட்டை விட்டுவிட்டேன். வருத்தப்பட்ட விஷ்ணு விஷால். ஆறுதல் கூறிய அஸ்வின்

By Rajkumar · 11/4/2020

தமிழ் திரையுலகில் 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இது தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

https://twitter.com/ashwinravi99/status/1248485509254373376

இதனைத் தொடர்ந்து சித்தார்த் சந்திரசேகரின் 'பலே பாண்டியா', சுதா கொங்கராவின் 'துரோகி', ஸ்ரீ பாலாஜியின் 'குள்ளநரி கூட்டம்', சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை', ராம் குமாரின் 'முண்டாசுப்பட்டி, ராட்சசன்', சுசீந்திரனின் 'ஜீவா, மாவீரன் கிட்டு', ரவிக்குமாரின் 'இன்று நேற்று நாளை', முருகானந்தமின் 'கதாநாயகன்', செல்லா அய்யாவுவின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என அடுத்தடுத்து பல படங்களில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்தார்.

இதையும் பாருங்க : டேட்டிங் போனா பொண்ணுங்களுக்கு இத வாங்கி கொடுங்க லவ் ஓகே. டிடி சொன்ன டிப்ஸ்.

தற்போது, பிரபு சாலமனின் 'காடன்', எழிலின் 'ஜகஜால கில்லாடி', மனு ஆனந்தின் 'FIR' மற்றும் முரளி கார்த்திக்கின் 'மோகன் தாஸ்' என பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். திரை உலகில் என்ட்ரியாவதற்கு முன்பு விஷ்ணுவின் கனவாக இருந்தது கிரிக்கெட் மட்டும் தான்.

https://twitter.com/TheVishnuVishal/status/1248478803531165702

டி.என்.சி.ஏ லீக் போட்டிகளில் விளையாடிய விஷ்ணு விஷால், தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "உங்களுக்கு தெரிந்த வேறு விளையாட்டில் இருக்கும் நபர்களில், யார் சிறந்த கிரிக்கெட் வீரராக வந்திருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்று கிரிக்கெட் வீரர் அஷ்வினிடம் கேள்வி எழுப்பியது.

https://twitter.com/TheVishnuVishal/status/1248479896344522756

அதற்கு பதில் அளித்த அஷ்வின் "வெண்ணிலா கபடி குழுவைச் சேர்ந்த மாரிமுத்து" என்று குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷாலை டேக் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஷ்வினின் ட்வீட்டிற்கு "சில நேரங்களில் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியிருக்கலாம் என்று தோணும்.. 20/20 தொடங்கியபோது நான் கிரிக்கெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அது என் பலமாக இருந்திருக்கலாம். இருப்பினும் எனது வாழ்க்கை எனக்கு வேறு விதமான திட்டங்களை வைத்துள்ளது" என்று விஷ்ணு விஷால் பதில் அளித்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full