டேட்டிங் போனா பொண்ணுங்களுக்கு இத வாங்கி கொடுங்க லவ் ஓகே. டிடி சொன்ன டிப்ஸ்.

0
1400
d
- Advertisement -

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கினார். இவர் பல முறை சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வாங்கி உள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும், டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.

இதையும் பாருங்க : சத்தமே இல்லாமல் தனது அடுத்தபடத்தின் அறிவிப்பை வெளியிட்ட அட்லீ.

- Advertisement -

அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகையும், தொகுப்பாளினியுமான டிடி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பதிவிட்டு அதில் அவர் கூறி இருப்பது, வெளியில் டேட்டிங் சொல்ல இதை வாங்கி கொடுங்க லவ் கண்டிப்பா செட் ஆகிவிடும். ஆனால், எனக்கு யாரும் இத வாங்கி தரவில்லை. அதனால் நானே இதை வாங்கி விட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் டிடிக்கு இரண்டாவது கல்யாணம் ஆகப்போகிறது என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனக்கு இரண்டாம் திருமணம் குறித்து எந்த எண்ணமும் தற்போது இல்லை என்று தெரிவித்திருந்தார் டிடி.

-விளம்பரம்-

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அவர்கள் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது. பிறகு திருமணம் ஆன சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதையும் பாருங்க : ஏன் இப்படி ஒரு ஆடை. கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்

திவ்யதர்ஷினி தனது காதல் கணவரை பிரிய முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement