மதுரையில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்.! அடங்காத அஜித் குரூப் மதுரை.!

0
1108
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவின் தல என்றழைக்கபடும் அஜித், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு முக்கிய நடிகராக பல ஆண்டுகளாக நிலைத்து நின்று வருகிறார். இவர் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கும் “விஸ்வாசம்” படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்ககொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

ajith fans

- Advertisement -

அஜித் அவர்கள் நடிப்பையும் தாண்டி கார் மற்றும் பைக் பிரியர் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் அவரது படங்களில் பைக், கார் பயன்படுத்தி மாஸ் காட்சிகள் இல்லாமலும் இருக்காது. தலையை போல தான் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

சமீபத்தில் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கபட்டது. இதற்கு பல்வேறு வரவேற்பும், எதிர்ப்பும் கிளமிபிய நிலையில் அஜித் ரசிகர்கள் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

-விளம்பரம்-

ajith fan

மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் சார்பாக சமீபத்தில் பைக் ராலி ஊர்வலம் நடைபெற்றது. அறத்தொடு இந்த நிகழ்வை மக்களுக்கு பயனுள்ளதாக மற்றும் வகையில் அஜித் ரசிகர்கள் ஹெல்மெட் அணிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துள்ளனர். அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement