சென்சார் போர்டு விஸ்வாசம் படத்திற்கு கொடுத்த சான்றிதழ் இது தான்..!அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

0
503
visvasam
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகை முன்னதாக விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி இதோ..!

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ (U) சான்றிதழை அளித்துள்ளது. இதனால் இந்த படம் சந்தேகம் இல்லாமல் குடும்பங்கள் பார்க்ககூடிய படமாக தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்க்னவே சிவா மற்றும் அஜித் இயக்கத்தில் வெளியான விவேகம் படத்திற்கு U/A சான்றிதழும், வேதாளம் மற்றும் வீரம் படத்திற்கு U சான்றிதழும் இடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் விஸ்வாசம் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement