சென்சார் போர்டு விஸ்வாசம் படத்திற்கு கொடுத்த சான்றிதழ் இது தான்..!அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

By Rajkumar · 24/12/2018

அல்டிமேட் ஸ்டார் அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு போட்டியாக பொங்கல் பண்டிகை முன்னதாக விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி இதோ..!

இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு 'யூ' (U) சான்றிதழை அளித்துள்ளது. இதனால் இந்த படம் சந்தேகம் இல்லாமல் குடும்பங்கள் பார்க்ககூடிய படமாக தான் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்க்னவே சிவா மற்றும் அஜித் இயக்கத்தில் வெளியான விவேகம் படத்திற்கு U/A சான்றிதழும், வேதாளம் மற்றும் வீரம் படத்திற்கு U சான்றிதழும் இடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் விஸ்வாசம் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full