Updated · 27 மே, 2026 அன்று 12:01 AM1 நிமிட வாசிப்பு
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக “விஸ்வாசம் ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
[embed]https://www.youtube.com/watch?v=GqMdbpYi5Yw[/embed]
நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு முதன் முறையாக அஜித் படத்தில் இசையமைக்கவுள்ளார் இசை அமைப்பாளர் இமான்.
மேலும்,இந்த படத்தில் தல அஜித்துடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்த திரைபடம் பொங்கல் அன்று வெளியாகாது என்றும் அதற்கு பதிலாக 26 ஆம் வெளியாகும் என்றும் சில செய்திகள் சமூக வலைதளத்தில் உலாவி வந்தது.
இந்நிலையில் விஸ்வாசம் திரைபடடம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 10 தேதியே வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியகிகியுள்ளது.
Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences.
Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.