விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் எங்கு , எப்போது தெரியுமா ! புதிய தகவல் ?

By Ajju · 1/12/2017
விவேகம் படத்திற்கு பிறகு புதிய இயக்குனருடன் அஜித் இணைவார் எனக் காத்திருந்த தல ரசிகர்களுக்கு திடீரென வியாழக்கிழமை மற்றும் V செண்டிமென்டில் அடுத்த படதின் டைட்டிலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர். வீரம், வேதாளம், விவேகம் என தற்போது 4ஆவது முறையாக விஸ்வாசத்தில் கூட்டணி சேர்ந்துள்ளளது அஜித் மற்றும் சிவா இணை. தற்போது படத்திற்கான ஹீரோயின் மற்றும் வில்லன் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதேபோல், டைட்டிலுக்கு ஏற்ற கதை அம்சம் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்திலும் இருக்கும் என சிவா அண்ட் கோ கூறி வருகிறது. மேலும், விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது. சென்னையில் துவங்கி ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.தளபதி-62 படமும், ஜனவரியில் சூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதால், தல - தளபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full