வீரம், வேதாளம், விவேகம் என தற்போது 4ஆவது முறையாக விஸ்வாசத்தில் கூட்டணி சேர்ந்துள்ளளது அஜித் மற்றும் சிவா இணை. தற்போது படத்திற்கான ஹீரோயின் மற்றும் வில்லன் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது.
அதேபோல், டைட்டிலுக்கு ஏற்ற கதை அம்சம் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்திலும் இருக்கும் என சிவா அண்ட் கோ கூறி வருகிறது. மேலும், விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது. சென்னையில் துவங்கி ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.தளபதி-62 படமும், ஜனவரியில் சூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதால், தல - தளபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




