விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த சர்வதேச விருது பெற்ற கலைஞர் இவர் தான்..!

By Rajkumar · 19/12/2018

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதியே திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் மூலம் அஜித்துடன் நான்காவது முறையாக கை கோர்த்துள்ளார் சிவா.

சிவாவுடன் தொடர்ந்து படம் நடித்து வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் அஜித்துக்காக இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் படுயுங்க : விஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..!

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் கண்ணான கண்ணே பாடல் மிகவும் ரம்மியமான மெலடி பாடலாக அமைந்துள்ளது.

https://twitter.com/immancomposer/status/1074478584570425344

பிரபல இளம் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் இமான் சர்வதேச அளவில் கிராமிய விருது பெற்ற கிட்டார் கலைஞர் பிரகாஷ் அவர்களை பயன்படுத்தியுள்ளாராம். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இமான். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full