விஸ்வாசம் படத்தின் டீஸர் நாளை இல்லை..!உறுதியான தேதி இது தான்..!

By Rajkumar · 24/12/2018

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிசம்பர் 25) வெளியாகும் எண்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்க : விஸ்வாசம் டீசரை பார்த்து மெர்சலான தணிக்கை குழு

ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி படத்தின் டீஸர் வரும் புத்தாண்டை ஒட்டி ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அஜித்தின் பி ஆர் ஓ தரப்பில் இருந்து உறுதிபடுத்தியுள்ளனர்.

மேலும், இந்த படத்தின் டீசரை ,துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் பார்த்துவிட்டு படத்தின் டீஸர் தாறுமாறாக உள்ளது என்று ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full