உறுதியானது விஸ்வாசம் படத்தின் டீஸர் தேதி..!இன்னும் இத்தனை நாட்கள் மட்டுமே..!

0
667

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம் ‘ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் சேர்த்து தற்போது மீண்டும் முடிக்கு பிளாக் ஹேர் கலரிங் செய்து புதிய கெட்டப்பில் அசத்த உள்ளார்.

படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் ,துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்க: விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி எப்போது..!இயக்குனர் சிவா அறிவிப்பு..!

- Advertisement -

அதில் ஒரு பதிவில், தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டீசரை பார்த்தேன், ஒரு வார்த்தை தான் : Mind Blowwing என்று பதிவிட்டுள்ளார். மேலும், மற்றுமொரு பதிவில், விஸ்வாசம் படத்தின் டீசரை பார்த்தேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இது தான் அஜித் படத்திலேயே மிக பெரிய மாஸ் ஹிட் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து படத்தின் டீஸர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டீசரை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement