வெளியானது 'அடிச்சி தூக்கு' பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.! அடிச்சி தூக்கு பங்காளிங்களா.!

By Rajkumar · 23/1/2019

அட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆக்ஷன், காமெடி சென்டிமென்ட்டோடு நடனத்திலும் இந்த படத்தில் அஜித் அசத்தியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

https://www.youtube.com/watch?v=mzNbJKKJdSw&feature=youtu.be

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தில் நடன இயக்குனராக பணி புரிந்த அசோக், வேட்டி கட்டு பாடலுக்கு அஜித் பயங்கரமாக ஆடி இருப்பார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இந்த படத்தில் அடிச்சி தூக்கு பாடலில் தான் அஜித் அசத்தியுள்ளார். 

இந்த பாடலின் இறுதியில் அஜித் தனியாக ஆடும் காட்சியில் திரையரங்கமே அதிர்ந்து போனது. இந்த பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த வீடியோ யூடுயூபில் வெளியாகியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full