விஸ்வாசம் அஜித் மகளுடன் இணைந்து நடித்துள்ள நதியா. வைரலாகும் வீடியோ.

0
2554
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் தமிழ், மலையாளம் மொழி மட்டுமல்ல தெலுங்கு மொழியிலும் கூட இன்று வரை நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். பின் இடைப்பட்ட காலங்களில் நடிகை நதியா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த M குமரன் S/o மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்து உள்ளார். அதன் பின் தமிழ்,தெலுங்கு மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பல ஆண்டுகள் இடைவெளி ஆனாலும், நடிகை நதியா மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறார். அப்பொழுது பார்க்கும் போது நடிகை நதியா அவர்கள் எப்படி சின்ன வயசு பெண் போல இருந்தாரோ அப்படியே இப்பவும் காட்சி அளிக்கிறார். மேலும், இவருடைய அழகை பார்த்து பல பேர் நீங்கள் இன்னும் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு இப்போது இருக்கும் நடிகைகளின் அழகுக்கு மிஞ்சும் அளவுக்கு நடிகை உள்ளார் என்றும் கூறுகிறார்கள். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகை நதியா.

நடிகை நதியா அவர்களுக்கு தற்போது 53 வயது ஆகிறது. இவ்வளவு வயது ஆனாலும் கூட மிக இளமையாக தோற்றம் அளிக்கிறார். சமீபத்தில் இவர் விளம்பர படம் ஒன்றில் நடித்து உள்ளார். இது குறித்த காட்சி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் உண்மையாலுமே நதியாவிற்கு 53 வயது ஆகிறதா? என்று அதிர்ந்து போனார்கள். நதியாவிற்கு வயசானாலும் அழகு போகவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement