நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ரவி அவனா நடித்துள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நடிகர் ரவி அவனா இந்த படத்தில் நடித்துள்ளார் என்று உறுதியாகியுள்ளது. தற்போது "விஸ்வாசம்" படத்தின் படப்பிடிப்புகள் ஹைத்ராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அஜித் மற்றும் ரவி அவனா படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் வெட்டி சட்டை கெட்டப்பில் இருக்கும் அஜித் குத்துச் சண்டை மேடையில் நின்றுக்ண்டிருக்கிறார். அவரது எதிரில் ரவி அவனாவும் நின்றுகொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தின் மூலம் "விஸ்வாசம்" படத்தில் ஒரு மாஸ் சண்டை காட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.




