அனிகாவ தெரியும், விஸ்வாசம் படத்தில் நடித்த இந்த பொண்ண ஞாகபம் இருக்கா ? இதோ அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்ட்டா புகைப்படங்கள்.

0
1191
Viswasam
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் கூறி செல்லமாக அழைத்து வருகின்றனர்.

- Advertisement -

தமிழில் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ விஸ்வாசம் திரைப்படம் தான. அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆண்டு பொங்கல் தின ஸ்பெஸலாக ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் அதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளிவந்த இந்த படம் தமிழக்தில் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது.இந்த படத்தில் அப்பா மற்றும் மகள் சென்டிமென்ட் தான் மைக்கருத்தாக இருந்து வந்தது. இந்த படத்தில் அஜித் மகளாக பேபி அனிகா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்தின் வில்லனாக நடித்திருந்த ஜகபதி பாபுவின் மகளாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரின் பெயர் சலோனி உமேஷ் புர்த்( Saloni Umesh Burde  ). விஸ்வாசம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. அதே போல பலரும் இவருக்கு விஸ்வாசம் படம் தான் முதல் படம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், இவர் விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே தமிழில் நடித்து இருக்கிறார்.

ஆம், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி இருந்த காலா படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹுமா குரோஷி யுடன் நடித்திருக்கிறார். ஆனால், விஸ்வாசம் படத்திற்கு பின்னர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. சமீப காலமாக பேபி அனிகா கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் நிலையில் இவரின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அதில் பேபி அனிகாவிற்கே டப் கொடுத்து இருக்கிறார்.

Advertisement