தனி தட்டு தனி டம்பளர், ஜாதி பாகுபாடு பார்த்த சொந்த பாட்டி – விவேக் செய்த செயல். அவரின் அக்கா அளித்த பேட்டி.

0
675
vivek
- Advertisement -

சிறுவயதிலேயே சாதி பார்க்க வேண்டாம் என்று தன்னுடைய பாட்டியை எதிர்த்தவர் என்று விவேக்கின் அக்கா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது.

- Advertisement -

விவேக் திரைப்பயணம்:

கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை 3 திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம் வந்து இருந்தது. இதை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் செல் முருகன் தொடங்கி இருந்தார்.

விவேக்கின் தாயார்

விவேக்கின் அக்கா அளித்த பேட்டி:

அதேபோல் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விவேக்கின் அக்கா விஜயலட்சுமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் விவேக் குறித்து கூறியிருந்தது, சிறுவயதிலேயே விவேக் மிகவும் சுட்டித்தனமாக இருப்பார். எங்களுடைய அப்பா மாதத்தில் பத்து நாட்கள் தான் வீட்டில் இருப்பார். மீதி நாட்கள் எல்லாம் அவருக்கு வெளியில் தான் வேலை. அதனால் வீட்டில் இருக்கும் அந்த கொஞ்சம் நாட்கள் கூட எங்களை அடிக்க மாட்டார், திட்ட மாட்டார். நிர்வாக பொறுப்பு அனைத்துமே அம்மா தான். வெளியில் எங்காவது செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் அம்மா எங்களுடைய பாட்டியிடம் எங்களை விட்டுவிட்டு செல்லுவார்.

-விளம்பரம்-

விவேக் குறித்து சொன்னது:

எங்களுடைய பாட்டி இவர்கள் இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டார். விவேக் மட்டுமே அழைத்துக் கொண்டு செல் என்று சொல்லுவார். அந்த அளவிற்கு அவர் சுட்டித்தனம் செய்வார். விவேக்கிற்கு சிறு வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் உண்டு. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும் அவர்களைப் போலவே மிமிக்கிரி செய்து நடித்து காட்டுவார். அது மட்டும் இல்லாமல் அவர் இருக்கும் இடத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பார். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சந்தோசமாக மாற்றி விடுவார். ஆரம்பத்தில் விவேக்கிற்கு சினிமாவின் மீதெல்லாம் ஈடுபாடு இல்லை. கல்லுரி படிக்கும் போது தான் அவருக்கு நடிப்பு வாய்ப்புகளும் வந்தது. அவர் சினிமா துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

சாதி குறித்து விவேக் சொன்னது:

மேலும், விவேக்கிற்கு சடங்கு, சம்பிரதாயம், ஜாதி, மதம் என இதில் எல்லாம் ஈடுபாடு கிடையாது. மக்களின் சந்தோஷத்தை குறைப்பதே சடங்கு சம்பிரதாயம்தான் என்று கூறுவார். சிறு வயதில் இருக்கும் போது எங்களுடைய பாட்டி எளிதாக பிற ஜாதிகளை கண்டுபிடித்து வருவார். அதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார். அவர்களுக்கு என்று தனியாக டம்ளர், தட்டு கொடுப்பார். இதை பிடிக்காத விவேக் பாட்டியிடம் வாக்குவாதம் செய்வார். பின் போராடி அவர்களையும் வீட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த அளவிற்கு ஜாதி மதத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர். வள்ளலார் சன்மார்க்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement