தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். ஆனால், இத்தனை ஆண்டுகளில் நடிகர் விவேக் கமலுடன் மட்டும் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஸ்டண்ட் யூனியன் பொன்விழாவில் விவேக் பேசிய போது கமலின் பெயரை குறிப்பிடவில்லை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் விவேக் பதில் அளித்துள்ளார்.

ஸ்டண்ட் யூனியன் பொன்விழாவில் விவேக் பேச்சு. பி யூ சின்னப்பா முதல் விஜய் வரை சொன்னவர் கமல்ஹாசனை விட்டுவிட்டார். ஸ்டண்ட் மேன்களுக்கு இன்சூரன்ஸ் கொண்டு வருதல், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி (வெளிநாட்டு வல்லுநர்கள் கொண்டு) என அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தியவர் கமல் என்றும் அவர்(விவேக்) பெரிய தப்பு பண்றார். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, அஜீத், விஜய் எல்லாம் சொல்லிட்டு கமலை பர்பஸா மிஸ் பண்றார். இங்க இருக்கிறவங்களுக்கு கமல் அருமை தெரியலை. ஆந்திர, மலையாள, கன்னட திரையுலகம் கொண்டாடுறாங்க.

Advertisement

விவேக் தலையெடுத்ததுன்னா 90களின் பிற்பகுதியில் இருந்து. 2000ல் இருந்து நல்ல பிக் அப். கமல் அந்த டைம்ல காமெடி ட்ராக்னு தனியா போகமாட்டார். பண்ணினா முழு காமெடிப் படம். அதுல விவேக் செட் ஆகாம இருந்திருக்கலாம். தெனாலி படத்துக்கு கூப்பிட்டாங்க. விவேக்குக்கு கால்ஷீட் பிரச்சினை என்றெல்லாம் விவேக் ஏன் கமல் படத்தில் நடிக்க முடியவில்லை என்பதர்க்கும் விளக்கத்தை கூறினார் அந்த ட்விட்டர்வாசி. .

இதற்கு கமல் ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும், விவேக்கை விமர்சித்து பலர் ட்வீட் போட ஆரம்பித்துவிட்டனர். இப்படி ஒரு ட்வீட் போட்ட சில நிமிடங்களில் இதற்கு பதில் அளித்த நடிகர் விவேக், என்னை மன்னிக்க வேண்டும். கமல் சார் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பு உண்டு. இனி வரும் காலங்களில் அம் மாபெரும் கலைஙனை நினைவு கூறுவேன் என்று பதில் அளித்துளளார்.

Advertisement
Advertisement