ஒரு திரைப்படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் மக்கள் சிரிப்பதற்கு மட்டுமே இருந்தது. காமெடி காட்சிகளை பார்த்து சிரிப்பதையும் தாண்டி அதில் சிந்திக்கவும் வைத்தவர் பிரபல காமெடி நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகளில் கண்டிப்பாக ஒரு மெசேஜும் இருக்கும். அது நம் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தாக நிச்சயம் இருக்கும். ஆகையால், ரசிகர்கள் இவரை பாசத்துடன் ‘ஜனங்களின் கலைஞன்’ என்று அழைத்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களின் படங்களில் விவேக் காமெடியனாக வலம் வந்திருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் விவேக். இவரது நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’ மற்றும் ‘வெள்ளைப் பூக்கள்’ என மூன்று படங்கள் வெளி வந்தது. இதில் ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தில் விவேக்கே கதையின் நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கியிருந்தார்.

Advertisement

மற்ற இரண்டு படங்களிலும் (விஸ்வாசம் மற்றும் பிகில்) காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கின்றது. ஆனால், அது ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகிய இருவரின் ரசிகர்கள் இடத்தில் இல்லை. அதுவும் சமூக வலைத்தளம் தான் அவர்கள் மோதிக் கொள்ளும் இடமாக இருக்கிறது.

அஜித்தின் ரசிகர்கள் விஜய்யை பற்றி இழிவாக பேசி பதிவிட வேண்டியது. விஜய்யின் ரசிகர்கள் அஜித்தை தாழ்த்தி பேசும் வகையில் ஒரு ஹேஸ் டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய வேண்டியது என இவர்களுக்குள் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களின் நாயகர்களான அஜித் மற்றும் விஜய்யே பல முறை சொல்லியிருக்கிறார்கள்.

Advertisement

ஆனாலும், ரசிகர்கள் அதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் அதை விளையாட்டாக கூட நினைக்கவில்லை, வெறுப்பாக தான் செய்கிறார்கள் என்று அவர்கள் போடும் பதிவிலிருந்தே பார்ப்பவர்களுக்கு புரியும். தற்போது, நடிகர் விவேக் இது குறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் “நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை.

Advertisement

என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும். நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன்” என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். கடைசியாக விவேக் காமெடியனாக நடித்த படம் ‘தாராள பிரபு”. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளி வந்தது. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் ‘தாராள பிரபு’ ரிலீஸ் செய்யப்படுமாம்.

Advertisement