குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா.! செம கியூட்டா இருக்கு..!

0
953
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.

-விளம்பரம்-

Anjana child

- Advertisement -

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இந்த இளம் ஜோடியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் இருவரது திருமணமும் கோடம்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் சந்திரன்- அஞ்சனா ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது இந்த தகவலை சஞ்சனாவின் கணவர் சந்திரன் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த தகவலை கேட்ட சஞ்சனாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

chandran

Anjana

இந்நிலையில் சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில் சந்திரனும், அஞ்சனாவும் தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட அஞ்சனாவின் ரசிகர்கள் மிகவும் குதுகுளமாகியுள்ளனர்.

Advertisement