பிரபல தொகுப்பாளர், விஜே அஞ்சனாவின் இன்ஸ்டா பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் சன் மியூசிக் விஜே அஞ்சனா. இவர் பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளனியாக இருந்து வந்தவர். சன் மியூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான்.

இது தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், மக்களை கவரும் பேச்சால் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே சின்னத்திரையில் மிகவும் பிரபலமான விஜேவாக வலம் வந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சனா திருமணம்:
இந்த காதல் ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடிகர் சந்திரன் யார் என்று கேட்டால், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் நடித்த முதல் படத்திலேயே, பல அறிமுக நாயகன் விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இருப்பினும் அப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை.
View this post on Instagram
அஞ்சனா ரீ என்ட்ரி:
அதற்குப் பிறகு சந்திரன், ஒரு சில படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹாட் ஸ்டாரில் யோகி பாபு நடிப்பில் வெளியான, 'சட்னி சாம்பார்' வெப் சீரியஸிலும் சந்திரன் நடித்திருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பிரேக் எடுத்துக்கொண்ட விஜே அஞ்சனா தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அஞ்சனா பதிவு:
புகைப்படங்கள், வீடியோக்கள் என்று அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சனா வெளியிட்டுள்ள வீடியோ தான் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், ' சர்ஜரிக்குப் பிறகு மனதளவில் தளர்வடைந்து விட்டேன்' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நான் வீட்டில் கவனக் குறைவால் விழுந்து விட்டேன். ஜிம்மிற்கான அனைத்து வேலைகளும் நின்று விட்டன.

அஞ்சனாவுக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு:
மேலும் அதில், வலிகளோடு இந்த பயணத்திலிருந்து மீண்டு வருவேன். நான் குணமாக குறைந்தது 6 வாரங்களுக்கு மேலாகும். குறிப்பாக காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர ஒரு வருடத்திற்கு மேலாகும். நான் முழுவதுமாக உடைந்து விட்டேன். ஆனால், பரவாயில்லை இது ஒன்றும் முடிவு கிடையாது என்று என்னிடம் நானே சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்கிற கேப்ஷனோடு , அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் எடுத்துக்கொண்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது அஞ்சனாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்






