டாப் ஹீரோ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ள அர்ச்சனாவின் மகள்.

0
2189
Archana
- Advertisement -

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-8.png

- Advertisement -

ளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

இதையும் பாருங்க : அஜித் சொன்னது போலவே நடந்து விட்டது. திரௌபதி இயக்குனர் பேட்டி.

-விளம்பரம்-

‘ச ரி க ம நிகழ்ச்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் பாடும் பாடகர்களுக்கு நிகராக அர்ச்சனாவின் காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கும் பல்வேறு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர்களுக்கும் அர்ச்சனாவின் ஆன்கரிங் மிகவும் பிடிக்கும். மேலும், ஒரு எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாடகர் கார்த்தி, எத்தனை சீசன் வந்தாலும் அர்ச்சனா இல்லமால் ச ரி க ம நிகழ்ச்சி இல்லை என்று பாராட்டி இருந்தார்.

https://www.instagram.com/p/B9CRzeClEC_/

சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’னு சொல்வாங்க இல்லையா?. அதேதான். அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி ஆங்கரிங் பண்ணஆரம்பிச்ச போது பலரும் வியந்தனர் இந்த நிலையில் அர்ச்சனா மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அர்ச்சனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement