செத்து தொல – ஏற்கனவே தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ள சித்ரா. ஷாக்கிங் தகவல்.

0
866
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-
chitra

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

- Advertisement -

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று (டிசம்பர் 14) சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.நேற்று நண்பகல் 12 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. நேற்று சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் இன்று (டிசம்பர் 15) சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்தது.

இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர். இப்படி ஒரு நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக ஹேம்நாத்திற்கும் சித்ராவிற்கும் சண்டை வந்ததாகவும், சித்ராவை ஹேம்நாத் யாருடன் ஆட்டம் போட்டு வந்த என்று சண்டையிட்டதாகவும் அதற்கு சித்ரா, நீ இல்லனா வாழ முடியாது என்று கூற செத்து தொல என்று ஹேம்நாத் கோபமாக அறையை விட்டு வந்த நேரத்தில் தான் சித்ரா தூக்கு போட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் சித்ரா நடித்து வரும் சீரியலில் அவர் ஹோரோவுடன் நெருக்கமாக நடிப்பதை விரும்பாத ஹேம்நாத் அடிக்கடி சித்ராவிடம் சண்டையிட்டுள்ளார். அதே போல ஷூடிங் ஸ்பாட்டிற்கு சென்றும் சித்ராவிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா ஏற்கனவே தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சித்ராவுடன் நடித்த வெங்கட் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டாரி ஒன்றை போட்டுள்ளார்.

Advertisement