விஜே சித்ராவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று திடுக்கிடும் புதிய அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : அவர் Anchorஆ இருந்தப்ப நான் Guest ஆ போனேன் – அவர் பெரிய ஆள வந்ததுக்கு இதான் காரணம், அவரை போல வர முடியாத காரணத்தை சொன்ன பிரஜின்.

சித்ராவின் மரணம் :-

இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்கது

Advertisement

சித்ராவுக்கு உண்மையில் கல்யாணம் நடந்ததா ?

ஹேம்நாத் சூளைமேட்டில் ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாக கூறி திருமணத்தை பதிவு செய்ததாக கூறி இருந்தார். ஆனால், சூளைமேட்டில் அப்படி ஒரு ஓட்டல் இல்லை. ஐந்து மாதங்களுக்கு முன்பே சித்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்கள். ஆனால், காவல்துறையினர் ஹேம்நாத்துடன் சேர்ந்துகொண்டு தகவல்களை மறைக்கிறார்கள். சித்ரா மரணம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளி வராமலேயே இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்து இருக்கும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

ஹேம்நாத்க்கு இதான் வேலை :-

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.மேலும், சித்ராவை அவன் தான் கொன்றான் என்றும் தற்போதும் கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஹேம்நாத்தின் 8 வருட நண்பர் சித்ரா மற்றும் ஹேம்நாத் தங்கி இருந்த அறையில் இருந்த பொருட்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார். அதில், கஞ்சா, ஆணுறை, சரக்கு என்று பல பொருட்கள் சிக்கி இருக்கிறது. மேலும், ஹேம்நாத்திற்கு பெண்களை ஏமாற்றுவதும், பணத்தை ஏமாற்றுவதும் தான் வேலை என்றும் கூறியுள்ளார்.

ஹேம்நாத் மனு தள்ளுபடி :-

சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேம்நாத் சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையை தனக்கு ஏதும் சம்பந்தமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். இதற்கடுத்தார் போல் சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கில் சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத்தான் காரணம் சித்ரா நடிக்கும் காட்சிகளில் யாருக்கும் நெருக்கமாகவும் நடிக்க கூடாது நடிக்கவே கூடாது என்று உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டால் மற்றும் ஹேம்நாத் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்ததார். ஆகையால் ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காமராஜ் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டு காமராஜ் தாக்கல் செய்த மனுவில் ஹேம்நாத்துக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

Advertisement