அவர் Anchorஆ இருந்தப்ப நான் Guestஆ போனேன் – அவர் பெரிய ஆள வந்ததுக்கு இதான் காரணம், அவரை போல வர முடியாத காரணத்தை சொன்ன பிரஜின்.

0
637
prajin
- Advertisement -

சின்னத்திரையில் பல வருடங்களாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ஒரு பிரபலம் என்றால் அது நடிகர் பிரஜின் பத்மநாபன் தான். இவர் முதன் முதலில் முன்பே சன்மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அந்த சமயங்களில் அனைவரின் மனதையும் குறிப்பாக பெண்கள் மனதை கொள்ளையடித்தவர் இவர். பின்னர் சினிமாவில் துணை நடிகராக தனது கலை பயணத்தை தொடங்கினார். ஜீவா நடித்த டிஷ்யூம் திரைப்படம் தான் இருக்கு முதல் படம்.

-விளம்பரம்-

இதற்கிடையே, திரைத்துறை வாய்ப்புகள் சரியான முறையில் அமையாத நேரத்தில், சீரியலில் நடிக்கத் தொடங்கினார். காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சி சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாகும் வாய்ப்புகளும் கிடைத்தன. இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி வெற்றிகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

மலையாள தொகுப்பாளருடன் திருமணம் :-

தமிழ் படங்கள் மட்டுமின்றி, இவர் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்ட இவர், திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர், மலையாள சேனலில் தொகுப்பாளாராக பணியாற்றிய சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்தார். இருவரின் திருமணத்திற்கு பிறகு, சாண்ட்ராவும் தமிழ் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் சின்னத்திரையில் விஜய் தொலைகாட்சியின் சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்தார்.

மீன்டும் பட வாய்ப்பு :-

சின்ன தம்பி சீரியல் மூலம், மறுபடி பிரபலமானார் பிரஜின். சீரியலும் மிகப்பெரிய ஹிட். அந்த சந்தோசம் ரெட்டிப்பாகும் வகையில் பிரஜின்- சான்ட்ரா தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து சின்னத்தம்பி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, விஜய் டிவியில் தொடங்கிய அன்புடன் குஷி என்ற மற்றொரு புதிய சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், நாளடைவில் சீரியல் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. அதேபோல, அன்புடன் குஷியில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரஜினுக்கு மீண்டும் பட வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

அடுத்தடுத்து முடிந்த சேரில்கள் :

இதையடுத்து, அன்புடன் குஷி சீரியலும், வைதேகி காத்திருந்தாள் தொடரும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இனி சீரியலில் நடிக்காமல் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள பிரஜின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில் ‘சினிமாவில் என்னுடைய முதல் பாதி சரியாக அமையவில்லை என்பதால் தான் சீரியலில் நடிக்க வந்தேன் தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் அமைந்திருக்கிறது இந்த முறை சினிமா என்னை கைவிடாது என்று நம்புகிறேன்’

Sk போல ஏன் வரவில்லை :

என்னுடைய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு முன்னால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நான் கெஸ்ட் ஆக சென்று இருக்கிறேன். ஒரு சிலர் சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து வந்து சாதித்து விட்டார். உங்களால் ஏன் இன்னும் அவரைப் போல வர முடியவில்லை என்று கேட்கிறார்கள். அவருக்கான நேரம் வந்துவிட்டது எனக்கான நேரத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement