சிகெரெட்டுடன் கொடுத்த போஸிற்கு மகேஸ்வரி கொடுத்த விளக்கம் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
39650
mages
- Advertisement -

சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா என்று சொல்லிகொண்டே போகலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி டப் கொடுத்து வருபவர் Vjவும் நடிகையுமான மகேஸ்வரி. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் புகைபிடிப்பது போல ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புகைபிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிற்கும். ஆனால், இந்த புகைப்படத்திற்கு காரணம். எல்லா நடிகர்களுக்கும் இப்படி ஒரு புகைப்படத்தை எடுப்பது என்ற ஆசை இருக்கும் அதை ஆசை தான் எனக்கும் என்று கூறியுள்ளார். இருப்பினும் மகேஸ்வரியின் இந்த விளக்கத்தை ஏற்காத பலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement