Vjவாக 12 ஆண்டுகள் நிறைவு, அடேங்கப்பா இதுவரை இத்தனை ஆயிரம் நிகழ்ச்சிகளை செய்துள்ளாராம் – அவரே பகிர்ந்த பயண வீடியோ.

0
528
manimegalai
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வ்ருடமாக காதலித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

- Advertisement -

விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக்கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பை கிடைத்தது. அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

12 ஆண்டுகள் நிறைவு :

இப்படி ஒரு நிலையில் மணிமேகலை தான் Vjவாக பயணத்தை ஆரம்பித்து 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளாராம். இதுகுறித்து தன் பயண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது Vjவாக தன் முதல் ஷோவை பண்ணதாகவும், இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

இத்தனை ஆயிரம் நிகழ்ச்சியா :

அதுமட்டுமல்லாது 2000கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று இந்த 12 ஆண்டுகளில் செய்து இருப்பதாகவும் இதற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார் மணிமேகலை.

manimegalai

சன் மியூசிக்கில் இருந்து வந்த மணிமேகலைக்கு ஒரு ரீ – எண்ட்ரியாக அமைந்தது விஜய் டிவி தான். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னை ஆங்காராக போட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். சமீபத்தில் துவங்கப்பட்ட ரசிகர்கள் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் அர்ச்சனா ஆங்காரக போடபட்ட போது மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement