உருவக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு Vj பார்வதி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
https://twitter.com/ThangaD72423349/status/1334041009110491136
பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். " உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.
https://twitter.com/Aravind95776992/status/1334015434656366593
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளா சென்ற போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் தொடை தெரியும் உடையில் இருந்ததால் நெட்டிசன்கள் சிலர், தொடை அழகி ரம்பா க்கு அப்றம் நீங்க தான் போங்க, மதுரை பொண்ணு மாதிரி அடக்கமாக உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் தம்பியின் தாழ்மையான வேண்டுகோள் என்றெல்லாம் கமன்ட் செய்தனர்.
https://twitter.com/parvathy_saran/status/1333780637593997317
இதற்கு பதில் அளித்துள்ள Vj பார்வதி, உருவக் கேலி செய்வதை நிறுத்துங்கள், தொடை என்பது பெண்களுக்கு இயற்கையான ஒன்று. உடனே, ரம்பா, திருமலை நாயக்கர் தூண், ஆண்டி. ஒரு பெண் எப்படி இருக்கிறாளோ அவளை அப்படியே ஏற்றுக்கொள்ள மாடீர்களா ? ஸிரோ சைஸ் கேக்குதோ ? போங்கடா டேய் என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார் Vj பார்வதி.





