இந்த ஐந்து 1 நிமிட டிரிக் மூலம் 10 கிலோ குறைக்கலாம் – VJ ரம்யா சொன்ன மிகவும் சுலபமான வழிகள்.

0
473
- Advertisement -

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ரம்யா. இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். இவர் முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

பிட்னஸ் ப்ரீக் ரம்யா :

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் பிட்னஸ் பிரீக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இவர் அதிக ஆர்வம் உடையவர்.

- Advertisement -

ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் :

அதனுடைய வெளிப்பாடுதான் தற்போது இவருக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. மேலும், நடிகை ரம்யா செய்த சாதனை குறித்து சோஷியல் மீடியாவில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை குவித்து இருந்தார்கள். நியூயார்க்கில் உள்ள இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டகிரேடிவ் நியூட்ரிஷனால் நடிகை ரம்யா ஒரு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளராக சான்றிதழ் பெற்று இருக்கிறார்.

பிட்னஸ் குறித்த டிப்ஸ்கள் :

தற்போது இவர் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழி நடத்துவதற்கும் தகுதியானவர். அதே போல் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக ஊடகத்தில் பிட்னஸ் தொடர்பான பல பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். அதிலும் StayFitWithRamya என்ற பக்கத்தையும் நடத்தி வருகிறார்

-விளம்பரம்-

அந்த பக்கத்தில் அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த பதில் பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் முன்பு இருந்ததைவிட மிகவும் ஒல்லியான இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஏன் இவ்வளவு ஒல்லி ஆகி விட்டீர்கள்? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அளவிற்கு ரம்யா உடல் எடையை குறைத்து சிறிய பெண் போல இருக்கிறார்.

ரம்யா கொடுத்த டிப்ஸ் :

இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் ஒரே நாளில் இரண்டு கிலோ வரை எப்படி குறைப்பது என்று ரம்யா டிப்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக உப்புகளை உட்கொள்வது, தண்ணீரை குறைவாக குடிப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதேசமயம் கீரை வாழைப்பழம் போன்ற உணவுகளை மேற்கொள்ளுங்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்றும் கூறி இருக்கிறார்.

Advertisement