குத்துன்னா low class, பாரதம்னா High Classஆ ? Vj ரம்யாவின் கேப்ஷனால் வெடித்த சர்ச்சை. அவரின் விளக்கம் இதோ.

0
1747
VJRamya
- Advertisement -

விஜயின் லியோ பாடலுக்கு நடனமாடி ஜாதி பெருமையை குறித்து விஜே ரம்யா பேசிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தான் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தார். அதன் பின் இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இதனால் ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இதனிடையே ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே ரம்யா விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் இவர் தன்னுடைய தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

- Advertisement -

விஜே ரம்யா குறித்த தகவல்:

மேலும், ரம்யா தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போதும் இவர் படங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் பிட்னஸ் விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பார்.

ரம்யா நடனமாடிய வீடியோ:

இதற்காக இவர் நிறைய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி இவர் பிட்னஸ் தொடர்பான வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் லியோ பாடலுக்கு நடனமாடி ரம்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் வரவா பாடலுக்கு பரதநாட்டியம் முறையில் நடனமாடி வீடியோ பதிவிட்டு, கிளாசிபை என்ற வார்த்தையை குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சாதி குறித்து பேசிய ரம்யா:

இப்படி இவர் பதிவிட்ட வார்த்தை, குத்து டான்ஸ் என்றால் லோ கிளாஸ், பரதநாட்டியம் என்றால் high கிளாஸ்? ஜாதி ரீதியாக பேசுகிறீர்களா என்று நெட்டிசன்கள் விஜே ரம்யாவை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு ரம்யா அவர்கள், மக்கள் என்னை பற்றி பலவிதத்தில் நினைத்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம் என்று பதில் பதிவு போட்டு இருக்கிறார். தற்போது நான் ரெடி பாடலுக்கு ரம்யா பதிவிட்ட கருத்து தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாக கிளம்பி இருக்கிறது.

லியோ படம்:

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement