ஹீரோயினாக களமிறங்கிய ரம்யா. வெளியான ப்ரோமோ (இது என்ன அந்த சீரியல் மாதிரி இருக்கு)

0
9718
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

-விளம்பரம்-

பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதே போல சமீபத்தில் வெளியான ‘சங்கத்தமிழன்’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரம்யா, ஹீரோயினாக களமிறங்கி இருக்கிறார். நெஞ்சோடு கலந்திடு என்ற சீரிஸ் மூலம் ரம்யா, ஹீரோயினாக களமிறங்கி இருக்கிறார். சமீபத்தில் இந்த சீரிஸ்சின் டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இது இந்தியில் ஹீனா கான் நடிப்பில் வெளியான ‘Bedard’ மியூசிக் வீடியோவை போல இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement