நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டு பிரபல தொகுப்பாளர் விஜயசாரதி போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. வணக்கம் இந்த வாரம் ஊட்டியிலிருந்து, இந்த வாரம் மதுரையிலிருந்து,இந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து என்ற இந்த வார்த்தைகளை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் தற்போதும் மறந்திருக்க மாட்டார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் 90 கிட்ஸ் மத்தியில் இன்றும் மனதிலிருந்து நீங்காமல் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் என்று நிகழ்ச்சியும் ஒன்று. ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல்.

நீங்கள் கேட்ட பாடல் :
இந்த நிகழ்ச்சியை வித்யாசமான முறையிலும் சுவாரசியமான முறையிலும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜய் சாரதி. ஊர் ஊராக சென்று அந்த ஊரில் என்ன சிறப்பு என்பதை கூறுவார். மேலும், அங்கு இருக்கும் ஊர் மக்களுடனும், அந்த ஊருக்கு வரும் சுற்றுல்லா பயணிகளுடனும் உரையாடி பின்னர் அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒளிபரப்புவார்கள்.
தற்போது வேண்டுமானால் 'இது என்ன புதுசான விஷயமா' என்று கேட்கலாம். ஆனால். 90 ஸ் கிட்ஸ்களுக்கு தான் இந்த நிகழ்ச்சியின் அருமையே தெரியும் என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார்.

நடிகையின் புகைப்படத்திற்கு போட்ட கமன்ட் :
அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் நடிகை ஒருவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு போட்ட கமன்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகைக்கு அட்வைஸ் :
சமீபத்தில் பிரபல இந்தி நடிகையான பிரியங்கா ஜவல்கர், ட்விட்டர் பக்கத்தில் புடவையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'என்னை யார் கட்டிபிடிக்க விரும்புகிறீர்கள்' என்று கேப்ஷன் போட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த விஜயசாரதி 'இது போன்ற பதிவை ஏன் நீங்கள் தவிர்க்க கூடாது'

நடிகையின் போலி கணக்கு :
பெண் சுதந்திரத்தை இப்படி தான் பயன்படுத்துவதா ?உங்களின் கருத்து சுதந்திரத்தை வேறு நல்ல விதத்தில் நீங்கள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். கடவுள் உங்களை காப்பாற்றட்டும் என்று பதிவிட்டு இருந்தார். விஜயசாரதியின் இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசி 'இது Fake id சார்' என்று கமன்ட் செய்ய அதற்க்கு பதில் அளித்த விஜயசாரதி 'அப்போ சம்பத்தபட்ட நபர் அவரின் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என்று பதிவிட்டுள்ளார்.





