விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த அன்னதான உதவி கேலிக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட ஒரு சில பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பண உதவி செய்து வருகின்றனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சென்னை மழை வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.  இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.#கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

விஜய்யின் ஆணைக்கிணங்க விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே நலத்திட்ட பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் இயக்கத்தின் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் Ecr சரவணன் பாலவாக்கம் விஷ்ராந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 200 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இந்த வீடியோவில் அவர் பரிமாறும் போது பின்னாலேயே ஒரு நபர் விஜய் படத்தை காட்டியபடி வந்து கொண்டே இருக்கிறார்.

Advertisement

இதனை கண்ட பலரும் இந்த விளம்பரம் தேவை தானா என்று விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சட்டையில் விஜயின் பேட்ச் இருக்க ஒவ்வொரு இலைக்கும் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்து வருவது அவசியம் தானா என்று கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் பதிவிட்ட பதிவை கண்டு சிலர் இந்த பதிவை வைத்து என்ன செய்வது, உங்களால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யுங்கள் என்று விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement