விக்ரம் போஸ்டரில் இருக்கும் ‘code red’ பற்றி விஸ்வரூபம் படத்திலேயே கூறியுள்ள கமல்.

0
2259
vikram
- Advertisement -

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் போஸ்டரில் ‘code red ‘ என்று குறிப்பிடபட்ட விஷயம் குறித்து நெட்டிசன்கள் சுவாரசியமான தகவலை பகிர்ந்து வருகின்றனர். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இந்த படத்தின் போஸ்டரில் உள்ள விஷயங்களை ரசிகர்கள் தற்போதே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ள ‘code red’ என்ற வாசகத்தை கமல் விஸ்வரூபம் படத்திலேயே சொல்லி விட்டார் என்று கூறி வருகின்றனர். விஸ்வரூபம் படத்தின் ஒரு காட்சியில் எதிரிகளால் சூழப்படும் போது நாயகி பூஜா குமரியிடம் ‘மாமாவிடம் போய் code redனு சொல்லு அவருக்கு புரியும்’ அப்படினா நான் செத்துட்டேன்னு அர்த்தம் என்று கூறுவார்.

-விளம்பரம்-

Advertisement