கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் 95வது ஆஸ்கர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை “The Elephant Wishperers” என்ற தமிழ் படம் தட்டி சென்றது. இந்த ஆஸ்கர் விருதை இயக்குனர் கார்த்திக் கொன்சால்வ்ஸ் மற்றம் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். ஆனால் இந்த படத்தை தமிழ் நாட்டு படம் என்று கூறாமல் தென்னிந்திய படம் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியது.

அதே போல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த உண்மையான பாடலுக்கான விருதை தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார். மேலும் ஆஸ்கர் வென்றவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்காமல், ஆஸ்கர் பட்டியலில் தேர்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

Advertisement

ஆஸ்கர் பட்டியலில் இருப்பவர்களுக்கு பரிசு :

அதாவது ஆஸ்கார் கிடைக்காத தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு சுமார் 1.03 கோடி மதிப்புள்ள 60 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. காலிஃபோர்னியா மாகாணத்தில் அடல்ட் நகரம் என அழைக்கப்படும் “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரில் செயல்பட்டு வரும் “Distinctive Assests” என்ற சந்தைப்படுத்தும் நிறுவனம் சார்பில் இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பரிசு பொருட்களில் கனடாவில் உள்ள “lifestyle” எஸ்டேட்டிற்கு சுற்றுலா செல்வதற்கான செலவு ரூபாய் 32 லட்சம் இந்திய மதிப்பில் கொடுக்கப்படுகிறது.

வழங்கப்படும் பரிசு பொருட்கள் :

அதோடு இத்தாலியில் புனரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்திற்கு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிகபச்சமாக 8 பேருடன் சுற்றுலா செல்வதற்கான செலவு. அங்கு 3 நாட்கள் தங்குவதற்கான ரூபாய் 7.3 லட்சம் செலவு, பின்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு சதுர மீட்டருக்கு நிலம், ஆனால் இந்த நிலத்தை மரக்கன்று நடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதோடு சேதமடைந்த வீடுகளை புனரமைத்துக்கொள்ள ரூபாய் 20லட்சம் மதிப்புள்ள கூப்பன். இவைகளோடு ஜப்பானில் மிகவும் பிரபலமான பால் ரொட்டி, அழகு சாதனா பொருட்கள், பயணத்தின்போது பயன்படுத்தும் பொருட்கள் போன்றவையும் இந்த பரிசு தொகுப்பில் அடங்கும்.

Advertisement

வரி செலுத்த வேண்டும் :

இந்நிலையில் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட 26 பேருக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனாலும் இவை வேண்டாம் என்றாலே புறக்கணிக்க உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் இந்த பரிசு பொருட்களை வாங்கும் பச்சத்தில் அதற்க்கான வரியையும் வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த பரிசு பொருட்களை வழங்கும் நிறுவனம் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஆஸ்கர் அகாடமிக்கு சம்மந்தம் இல்லாமல் வழங்கி வருகிறது. இதனால் பரிசை வாழுகுவோருக்கு அந்த பரிசு வருமானமாக கருதப்படுவதால் வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement