பல கோடி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மெர்சல் டீசர் எப்போது.?

0
1551
Vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் மற்றும் இயக்குஞர் அட்லீ கூட்டணியில் உருவான “மெர்சல்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான கடந்த ஜீன் 22 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிடப்பட்டது.
Vijayஜல்லிக்கட்டு தொடர்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்கிற நிலையில் கடந்தமாதம் 20ம் தேதி ஆடியோ லாஞ்ச் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

அப்போது ஆடியோ லாஞ்சில் பேசிய அட்லீ மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.ஆடியோ லாஞ்சில் வெளியான ஆளப்போறான் தமிழன் பாடலும் தற்போது அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது.அதுமட்டுமில்லாமல் பிற பாடல்களும் படத்திற்கு பலம்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
Vijayஇந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குஞர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் அட்லீ பிறந்தநாள் அன்று மெர்சல் படத்தின் டீசர் வெளியாகும் என்று பதிவுசெய்துள்ளார்.

- Advertisement -

இயக்குஞர் அட்லியின் பிறந்தநாள் இம்மாதம் 21ம் தேதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
Vijayஇதையும் படிங்க: மெர்சல் படத்தின் அசத்தல் அனிமேஷன்.!

மெர்சல் தீபாவளி விருந்தாக வெளிவந்து மாபெரும் வெற்றிபெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

-விளம்பரம்-
Advertisement