தன்னை கேலி செய்து அருண் விஜய் போட்ட டீவீட்டுக்கு தன் படத்தில் பதிலடி கொடுத்த Sk - இதோ அந்த வீடியோ.
தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது. அதோடு இந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார்.
இதையும் பாருங்க : ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை - அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள் (இது தான் காரணமாம்)
ரெமோ பட விழாவில் அழுத SK :
இப்படி சினிமாவில் சிவா உச்சத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நுழைய பல போராட்டங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார்.இவரைப் பற்றி விமர்சனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து கூட ரெமோ படத்தின் விழாவின் போது கூட சிவகார்த்திகேயன் அழுதுகொண்டு சொல்லி இருந்தார்.
https://twitter.com/subjudiced/status/1510943455148609536
அருண் விஜய் போட்ட பதிவு :
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,' நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.
https://twitter.com/RithisKumar6/status/1496412567270477825
அருண் விஜய் கொடுத்த விளக்கம் :
அதிலும் அருண் விஜய்யை கிண்டல் கேலி செய்யும் விதமாக மீம்ஸ்,ட்ரோல்ஸ் எல்லாம் போட்டு இருந்தார்கள். பின் இதைத் தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அது என்னவென்றால், என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். சினிமாவில் இத்தனை வருடங்களாக இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும்.
https://twitter.com/chettyrajubhai/status/1496470763825942529
படத்தில் பதிலடி கொடுத்த சிவா :
இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவர். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கு இடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், அருண்விஜய்க்கு 'Mr லோக்கல்' படத்தில் சிவகார்திகேயன் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.