‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை – அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள் (இது தான் காரணமாம்)

0
552
beast
- Advertisement -

விஜய்யின் பிட்டு படத்தை குவைத்தில் வெளியிட அரசு தடை விதித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
beast

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் வெளியிட்டு பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

குவைத்தில் படம் வெளியிட விதிமுறை:

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை குவைத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக அரபு நாடுகளை பொறுத்தவரை படங்களை வெளியிடுவதற்கு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்படும். தீவிரவாத காட்சிகள், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களை அரபு நாடுகள் அனுமதிக்கப்படாது. அதேபோல் அரபு நாடுகளில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட படங்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் குவைத் அரசும் விதிமுறைகளை பயங்கரமாக பின்பற்றி வருகிறது.

குவைத்தில் பீஸ்ட் படம் வெளியிட தடை:

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான குரூப் படத்தையும் குவைத் அரசாங்கம் வெளியிட அனுமதி மறுத்தது. தமிழில் சமீபத்தில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தையும் குவைத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன்னா, பீஸ்ட் படத்தில் இடம்பெறும் தீவிரவாதிகள் குறித்த காட்சிகளுக்காகவும், வன்முறை காட்சிகளுக்காகவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இங்கு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பீஸ்ட் படத்தில் வன்முறை காட்சிகள் காரணமாக தான் குவைத்தில் திரையிட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement