மாணவிகள் பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் இந்த வீடியோவை தான் விவேக் இந்த காமெடில வச்சி செஞ்சிருக்காரு.

0
2332
vivek
- Advertisement -

தமிழக மக்களால் இருந்த சின்னக் கலைவானர் என்று போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

-விளம்பரம்-

நடிகர் விவேக் படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தங்கலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரனாகவும் பல கருத்துகளை சொல்லி இருப்பார். அந்த வகையில் பாலயத்து அம்மன் படத்தில் நடிகர் விவேக் பல்வேரு மோசடிகளை செய்யும் நபர்கள் குறித்து காட்டி இருப்பார். இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி ஆகிய இருவரும் போலி சாமியார் போல நடித்து இருப்பார்கள்.

இதையும் பாருங்க : இதுக்கு காஸ் செலவு பண்ணாம இருந்த இப்படி தான் இருந்திருப்பேன் – பிரியா ஆனந்த்தின் குசும்பான மீம்.

- Advertisement -

ஆனால், இந்த காமெடியை அவர் யாகவா முனிவர் மற்றும் சிவ சங்கர் பாபா இருவரும் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது போட்டுக்கொண்ட சண்டையை கேலி செய்யும் விதமாக தான் இந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வருவதாக முன்னாள் மாணவிகள் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவாகரத்தில் வெளிநாடு தப்பிக்க இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். சிவசங்கர் பாபாவும், யாகவா முனிவரும் பங்கேற்ற பேட்டி ஒன்றை தான் விவேக் இந்த காட்சியில் கலாய்த்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement