அஜித்தை முதன் முதலில் "தல"னு அழைத்தது யார் ? - சொல்கிறார் விவேக்

By Tamil Selvam · 1/10/2017
பெரிய பெரிய நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை பலருக்கும் சினிமாவில் ஒரு அடையாள பெயர் இருப்பது வழக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு. இந்த வரிசையில் நடிகர் அஜித் அவரது ரசிகர்கள் தல என்று தான் அழைப்பார்கள். அஜித்தை "தல"னு முதல் முதலில் அழைத்தது "மகாநதி சங்கர்" தான் என்று கூறியுள்ளார் நடிகர் விவேக். சமீபத்தில் நடந்த 50வது வருட ஸ்டண்ட் யூனியனின் விழாவில் கலந்து கொண்டு பேசியர் நடிகர் விவேக், ஸ்டண்ட் நடிகர் மகாநதி சங்கரை போற்றும் வகையில் இதனை தெரிவித்தார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full