'பிக் பாஸ் 8' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல் விலகியதற்குப் பிறகு, யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக நின்று இருக்கிறது. பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
கமல் விலகல்:
இந்நிலையில் கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக இந்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்து உள்ளார்.
View this post on Instagram
கமல் பதிவு:
மேலும், நீங்கள் காட்டிய அன்பிற்கும் பாசத்திற்கும், எப்போதும் உங்களுக்கு நன்றி உணர்வோடு இருப்பேன். நீங்கள் காட்டுகின்ற தீவிர ஆதரவு பிக் பாஸ் தமிழை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக மாற்றி உள்ளது. விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடைய செய்ததில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பிக் பாஸ் 8 நிகழ்ச்சியும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்தது யார்:
நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் இல் இருந்து விலகிய நிலையில், அடுத்தது யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக உள்ளது. பிக் பாஸ் 8 சீசனிற்காக செட் அமைப்பது, போட்டியாளர்களை தேர்வு செய்வது போன்ற வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டார்களாம். தற்போது கமல் இடத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று விஜய் டிவி முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இவர்கள் இருவரில் ஒருவர்:
மேலும், ரம்யா கிருஷ்ணன், சூர்யா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று கூறி வருகிறார்கள். அல்லது, ஏற்கனவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், நடிகர் சிம்பு சில வாரங்கள் தொகுத்து வழங்கியதால், தற்போது பிக் பாஸ் 8 சீசனை முழுமையாக அவர் பண்ண வாய்ப்பு இருக்கிறது என்று ஒருபுறம் தெரிகிறது. மறுபுறம் விஜய் டிவி, நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.






