4 படத்தில் ஒன்றாக பணி புரிந்தும், சிறுத்தை சிவா தந்தையின் இறுதி சடங்கிற்கு அஜித் ஏன் போல. சிவா அளித்த பேட்டி.

0
917
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை நேற்று காலமாகி உள்ள சம்பவம் திரியுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சிறுத்தை சிவா அவர்களின் தந்தை காலமாகி இருக்கிறார். இதனால் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வந்த இவரது தந்தை ஜெயக்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயக்குமார் ஆவணப்பட புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறுத்தை சிவாவின் இறுதி சடங்கில் நடிகர் பாண்டியராஜன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், சிறுத்தை சிவாவை வைத்து 4 படத்தை எடுத்த அஜித்தோ, தற்போது அண்ணாத்த படத்தை எடுத்து வரும் ரஜினியோ நேரில் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிறுத்தை சிவா பேசுகையில் ‘அப்பாவை நினைச்சு எப்போவும் பெருமைப்படுறேன். அப்பாவுக்கு கமர்ஷியல் படங்கள் இயக்கணும்னு ஆசையிருந்தது.ஆனால் ஒரு படத்தை இயக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை இருப்பினும் சினிமாவில் ஒரு இயக்குனராக என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் என்னுடைய முதல் படமான படத்தின் வெளியீட்டின்போது என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து சென்றேன் என்னப்பா மிகவும் பெருமைப் பட்டார்.

ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. எங்களால் முடிஞ்சளவுக்கு முயற்சி பண்ணோம். ஆனா, அப்பாவை காப்பத்த முடியாம போயிருச்சு.இப்போ இருக்குற கொரோனா சூழல்ல நிறைய நண்பர்கள்னால அப்பாவுடைய இறுதி சடங்குல கலந்துக்க முடியல. பலரும், போன்ல தொடர்பு கொண்டு பேசினாங்க. ரஜினி சார் மற்றும் அஜித் சாரும் போன்ல பேசுனாங்க. என்னோடு துக்கத்தை பகிர்ந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நன்றி. 

-விளம்பரம்-

Advertisement