விருதுநகர் கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக நடிகை கஸ்தூரி, முதலமைச்சர் மு க ஸ்டாலினை விமர்சித்து பதிவு போட்டிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகரில் 22 வயது பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளது. அதோடு இந்த கொடூர சம்பவத்தை அந்த கும்பல் வீடியோவாக எடுத்து அந்த பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்தப் பெண்ணை மிரட்டி 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் அந்த கும்பல் செய்திருக்கிறது. இதனால் தாங்க முடியாத அந்தப் பெண் மகளிர் ஹெல்ப் லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறார்.

பின் அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் கைது செய்து உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்ட அந்த கும்பலில் பள்ளி செல்லும் மாணவர்களும், ஒரு திமுக பிரமுகரும் உள்ளார் என்பது தெரிய வந்து இருக்கிறது. போலீஸ் புகாரின்படி, அந்த பெண் சரவணா என்ற ஹரிஹரனுடன் சமூக ஊடகங்கள் மூலம் நட்பு கொண்டிருந்தார். பின் இவர்கள் காதல் உறவில் ஈடுபட்ட பிறகு இருவரும் உடலுறவு கொண்டு இருக்கிறார்கள். அதை ஹரிஹரன் பதிவு செய்துள்ளார். பின் அந்த வீடியோவை ஹரிஹரன் தன்னுடைய நண்பர்களிடம் காட்டியதாகவும் அவரிடமிருந்து அந்த பெண்ணின் விவரங்களை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:

பிறகு அவர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2002 வரை பலமுறை பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக போலீசில் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் மாடசாமி என்பவரின் உதவியை நாடி இருக்கிறார். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர் மாடசாமியும் அந்த வீடியோவை பயன்படுத்தி அந்த பெண்ணை அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது, 18 வயது ஒருவர், 17 வயது ஒருவர் மற்றும் 15 வயது ஒருவர், சிறுவன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளன.

விருதுநகர் சம்பவம் குறித்து முதல்வர் கூறியது:

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களில் ஜூனைத் அகமது என்பவர் ஆளும் கட்சியான திமுகவின் செயல்பாட்டாளர் என்றும், ஹரிஹரன் என்ற நபரும் திமுகவை சேர்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தெரிந்தவுடன் இவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு குற்றம் சாட்டபட்டவர்கள் வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், நாடு முழுவதும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவோம் என்றும் 60 நாட்களுக்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகை கஸ்தூரி பதிவிட்ட டீவ்ட்:

இப்படி திமுக முக ஸ்டாலின் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து நடிகை கஸ்தூரி டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

கவிஞர் சல்மா பதிவிட்ட பதில் ட்வீட்:

இப்படி நடிகை கஸ்தூரி பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலானது தொடர்ந்து இதை பார்த்த பலரும் கமெண்ட் போட்டு வந்தார்கள். உடனே இதற்கு திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா பதில் ட்வீட் போட்டு இருக்கிறார். அதில் அவர், பேசத் தெரிந்தால் பேசுங்கள். பொள்ளாச்சியிலும் காஷ்மீரிலும் நடந்த குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆளும் அரசுகள் துணை நின்று அவர்களை காத்தனர். இன்று குற்றவாளிகள் கைது உடனடியாக நடந்து , கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென முதல்வர் சொல்லியிருக்கிறார். காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று பதிவிட்டிருக்கிறார். சல்மாவை தொடர்ந்து பலரும் கஸ்தூரி டீவ்ட்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement