ஏன் 90Ml படத்தை மட்டும் விமர்சிக்கவில்லை.! வாய் திறந்த ப்ளூ சட்டை மாறன்.! இதான் காரணமா.!

0
1260
Maran
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட ஆர்மிகளும் கூட உருவானது.ஆனால், அந்த புகழை வைத்து இவருக்கு எந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு ’90ml’ என்ற படத்தில்நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பல்வேறு விமர்சகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும், பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் இந்த படம் சமூகத்திற்கு சீர்கேடு என்று கூறியிருந்தார். அதேபோல பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் இந்த படத்திற்கு எந்த ஒரு மதிப்பையும் அளிக்காமல்மோசமாக விமர்சனமும் சேகர் .இதனால் அவருக்கும் படத்தின் இயக்குனரான அனிதா உதீப்பிற்கும் டுவிட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது.

- Advertisement -

பிரசாந்த் செய்த விமர்சனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால், பிரசாந்தின் விமர்சனத்தை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தது ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தான். ஆனால், இதுவரை இந்த படத்தை மாறன் விமர்சனம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை ஏன் யோசிக்கவில்லை என்று ட்விட்டரில் முதன் முறையாக பதில் அளித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளது போல ஒரு வீடியோ பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோ 4 லட்சம் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோ போலியானது என்று ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பிரியங்கா என்ற ரசிகை ஒருவர் ஏன் இந்த படத்தை யோசிக்கவில்லை என்று கேள்வி கேட்டு இருந்தார் அதற்கு பதிலளித்த மாறன்,எங்கள் குழு இதுபோன்ற திரைப்படங்களை விமர்சித்ததை இனி தவிர்த்து விடும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே இந்த படத்தை நல்ல படம் என்று விமர்சிக்க விமர்சகர்களுக்கு இந்த படத்தின் இயக்குனர் அனிதா உதீப் பணம் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார் பிரசாந்த். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சனம்செய்யாமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement